முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் மதசார்பின்மையே எனக்கு முக்கியம் - நரேந்திர மோடி

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். - 11 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு செல்ல விசா மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மோடி அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் மதசார்பின்மையே முக்கிய இலக்காகும். அனைத்து குடிமக்களுக்கும் இந்தியா முன்னுரிமை கொடுக்கும். நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நாட்டின் அனைத்து மதத்தை சேர்ந்த சிந்தனையாளர்களும் விஞ்ஞானிகளும் உள்ளனர். நான் ஒரு இந்தியனாக இருப்பதால் இந்தியாவை நேசிக்கிறேன். நாம் எந்த வேலையையோ முடிவையோ எடுத்தாலோ அதில் இந்தியா உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இந்திய முன்னேற்றத்திற்காக அனைவரும் மத சார்பின்மையுடன் பணியாற்ற வேண்டும். என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் மத சார்பின்மையே முக்கியம். குஜராத் மாநிலம் வளர்ச்சியின் அடையாளமாக இருக்கிறது. இதனை முன்மாதிரியாக கொண்டு மற்ற மாநிலங்களும் திகழ முயற்சிக்கின்றன. உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா விளங்கி வருகிறது. 19 ம் நூற்றாண்டு ஐரோப்பியர்களுக்கு என்றால், 21 ம் நூற்றாண்டு இந்தியர்களுக்கானது. அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தியா முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாக இளைஞர்கள் திகழ்ந்து வருகின்றனர் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்