முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பள்ளிகளில்தான் மாணவர்கள் அதிகம் பயிலுகின்றனர்

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.27 - தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளில்தான் மாணவர்கள் அதிகம் பயிலுகின்றனர் என்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.தங்கவேல் பேசினார். அதன் விவரம் வருமாறு:-

கே.தங்கவேல் (சி.பி.எம்.): அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டு வருகிறது. 

அமைச்சர் பி.பழனியப்பன்: தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே எந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது என்பதை கூற வேண்டும். 

குணசேகரன் (சி.பி.ஐ.): அரசு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதை மத்திய, மாநில அறிக்கைகளே கூறுகின்றது. 

வித்யதாரணி (காங்.): கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. எனவே ஆங்கில வழிக்கல்வி தொடக்கப்பள்ளிகளில் கொடுத்தால் நல்லது. 

அமைச்சர் வைகைச்செல்வன்: தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில்தான் கூடுதலான மாணவர்கள் பயிலுகின்றனர். தொடக்கப்பள்ளியில் 16 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும், நடுநிலைப்பள்ளியில் 13 லட்சத்து 83 ஆயிரத்து 756 பேரும், உயர்நிலைப் பள்ளிகளில் 7 லட்சத்து 20 ஆயிரத்து 381 பேரும், மேல்நிலைப்பள்ளிகளில் 22 லட்சத்து 84 ஆயிரத்து 992 பேரும் மொத்தமாக 58 லட்சத்து 52 ஆயிரத்து 896 மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயிலுகின்றனர்.

எனவே அதிகமான மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களைவிட அரசுப் பள்ளிகளில்தான் அதிகம் பயிலுகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்