முக்கிய செய்திகள்

அசாமில் ஆட்சி அமைப்போம் - பாரதிய ஜனதா

assam map 0

மும்பை, ஏப்.27 - அசாம் மாநிலத்தில் ஆட்சி அமைப்போம் என்று பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. மும்பை மாநகர பா.ஜ.க. ஊழியர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் அசாம் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும் என்றும், அதனால் அம்மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசை தாங்கள் அமைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு  மற்றும் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் தங்களது கட்சிக்கு அதிகமான இடங்கள் கிடைப்பது கடினம் என்றாலும் கணிசமான வெற்றியை பெறுவோம் என்றும் கட்காரி கூறினார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பெறும் வெற்றியின் மூலம் தங்களது கட்சியின் அமைப்பு ரீதியிலான, அரசியல் ரீதியிலான விரிவாக்கம் இருக்கும் என்றும் அவர் கூறினார். வரும் நாட்களில் இந்திய அரசியலில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கட்சி கடுமையாக பாடுபட்டுள்ளது. அதனால் தங்களது கட்சிக்கு இந்த 5 மாநில தேர்தலில் எதிர்பார்த்ததைவிட நல்ல வெற்றி கிடைக்கும் என்றும் கட்காரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: