முக்கிய செய்திகள்

சம்பளம் உயர்வு கோரி விமானிகள் ஸ்டிரைக்

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011      இந்தியா
AirIndia

 

புதுடெல்லி,ஏப்.28 - முன்னாள் ஏர் இந்தியா கம்பெனியில் பணிபுரியும் விமானிகள் சம்பளம் உயர்வு கோரி நேற்று ஸ்டிரைக் செய்தனர். இதனால் சுமார் 20 பயணிகள் விமானம் செல்லவில்லை. விமான சர்வீஸ் பாதித்தது. 

ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கம்பெனிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுவிட்டன. ஏர் இந்தியா விமான கம்பெனியில் பணிபுரியும் விமானிகள் சம்பள உயர்வு, பணிக்கான வசதிகள் செய்து தரக்கோரி நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 800-க்கும் மேற்பட்ட விமானிகள் நேற்று பணிக்கு செல்லவில்லை. இதனால் 20 பயணிகள் விமானங்கள் செயல்படாததால் சர்வீஸ் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேசமயத்தில் ஏர் இந்தியா நிர்வாகமும் கடும் நடவடிக்கையை எடுக்கத்தொடங்கிவிட்டது. ஏர் இந்தியா விமானிகள் அதிகம் உறுப்பினர்களாக உள்ள இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டதோடு டெல்லியில் உள்ள அந்த அலுவலகத்தையும் சீல் வைத்து மூடிவிட்டது. மேலும் விமான சர்வீஸ் பாதிக்கப்படுவதை தடுக்க நிர்வாகத்துறையில் இருந்த 150-க்கும் மேற்பட்ட விமானிகள் அழைக்கப்பட்டுள்ளனர். 

ஏர் இந்திய விமானிகளுக்கு சம்பளம் உயர்வு குறித்து ஏர் இந்திய நிர்வாக பிரதிநிதிகளுக்கும் தொழிலாளர் நல அலுவலருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக ஏர் இந்திய நிர்வாகத்திற்கு விமானிகள் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த வேலை நிறுத்தமானது சட்டவிரோதமானது என்று ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: