கர்நாடக தேர்தல்: பிரச்சாரத்தை தொடங்கினார் ராகுல்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஏப். 24 - கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று ராய்ச்சூரில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 5 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ,ஆகியோர் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்கின்றனர். ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தை 23 ம் தேதி முதல் தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று கர்நாடகா வந்த அவர் ராய்ச்சூரில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

அதை தொடர்ந்து அவர் பிஜப்பூர் மாவட்டத்திலும் பிரச்சாரம் செய்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28 ம் தேதிக்கு பதில் வரும் 26 ம் தேதி கோலார், தும்கூர், ஹவோயில் அவர் பிரச்சாரம் செய்கிறார். மே மாதம் 1 ம் தேதி மாண்டியா, ஹாசன், ஷிமோகா மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார் ராகுல் காந்தி. சோனியா காந்தி வரும் 25 ம் தேதி சிக்மக்லூர் மற்றும் மங்களூரில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வரும் 29 ம் தேதி ஹூப்ளி, தார்வாட் மற்றும் பெங்களூரில் வாக்கு சேகரிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: