ஒருதலைக் காதல்: உ.பி.யில் பள்ளி மாணவி படுகொலை

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஏப்ரல்.24 - கண் மூடித்தனமான ஒரு இளைஞனின் காதல், பள்ளி மாணவியின் உயிரைப் பறித்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோமதி நகரில்  இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. என்னை திருமணம் செய்துகொள் என்று அந்த இளைஞன் வற்புறுத்த அதை அந்த மாணவி ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த இளைஞன் கூர்மையான ஆயுதத்ததால் தாக்கியதில் அந்த மாணவி உயிரிழந்தார். பட்டப் பகலில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

கோமளா, மோகினி. இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள். இவர்களது தந்தை கோண்டா என்ற இடத்தில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். 

மோகினி எஸ்.எஸ்.எல்.சி. பாஸாகிவிட்டார். மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நர்ஹி பகுதியில் உள்ள பள்ளியில் கோமளா இப்போதுதான் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி உள்ளார். மேற்கொண்டு படிப்பதற்கும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும் பாஸ்போர்ட் அளவு போட்டோ தேவைப்படும். எனவே போட்டோ  எடுத்துவருமாறு இவர்களது தாய் போட்டோ ஸ்டூடியோவுக்கு அனுப் பி வைத்தார். இதுவே கோமளாவுககு இறுதி ஊர்வலமாக அமைந்து விட்டது.

போட்டோ எடுப்பதற்காக சகோதரிகள் இருவரும் ஸ்டூடியோவக்கு சென்றனர். அப்போது கமல் திவாரி என்பவன் இவர்களை த் தொடர்ந்து ஸ்டூடியோவுக்கு வந்தான். கமல் திவாரிக்கும், கோமளாவுக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்துள்ளது. தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கமல் திவாரி கூறியதை கோமளா ஏற்காமல் அவனை தவிர்த்து வந்தாள். கமல் திவாரி ஒரு பெயிண்டர். இவன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு ஒரு அறையை எடுத்து அங்கு தங்கி வந்தான். அந்த பகுதியில் கோமளா வீடு இருந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களானார்கள்.

என்னை திருமணம் செய்துகொள் என்று கமல் திவாரி கேட்க, அதற்கு  கோமளா குடும்பத்தினர் கடும் எதிர்ப்புதெரிவித்தனர்.  எனவே திருமணம்செய்ய கோமளா மறுத்தாள். அவன் பல முறை கூறியும் அவனால் கோமளாவை சமாதானம் செய்ய முடியவில்லை. எனவே அவளை தீர்த்துக் கட்ட கமல் திவாரி முடிவு செய்தான் என்று போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வித்யாசாகர் மிஸ்ரா தெரிவித்தார்.

  எனது வீட்டில் பிரச்சனை உள்ளது. எனவே என்னால் இப்போது திருமணம் செய்ய இயலாது என்று கோமளா கூறினாள்.இதனால் ஆத்திரமுற்ற கமல் திவாரி, கூர்மையான ஆயுதத்தால் கோமளாவின் கழுத்தில் வெட்டினான். அதே இடத்தில் சரிந்தாள் கோமளா.அங்கு நின்றவர்கள் இந்த சம்பவம் பற்றி கோமதி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக லோகியா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட கோமளா அங்கு இறந்தாள்.           

திவாரி மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: