பாகிஸ்தான் தேர்தலில் கழுதை வண்டியில் பிரசாரம் செய்யும் வேட்பாளர்

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்: ஏப், - 28 - பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் கழுதை வண்டியில் பிரசாரம் செய்யும் இந்து வேட்பாளரான மெஹ்ரா ஹுன்றி பிஹீல் அனைவரது கவனத்தையும் ்ர்த்து வருகிறார். பாகிஸ்தானில் மே 11-ந்தேதி பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரஹீம் யர் கான் தொகுதி சிறுபான்மைப் பிரிவு மக்கள் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த வேட்பாளரான மெஹ்ரா ஹுன்றி பிஹீல் என்பவர் போட்டியிடுகிறார். இவர் புதுமையாக கழுதை வண்டியில் சென்று மக்களிடம் பிரசாரம் செய்து ஓட்டு கேட்கிறார். தாம் ஒரு ஏழை என்றும் ஏழைகளின் துன்பம் தமக்கு மட்டுமே தெரியும் என்றும் டச்சிங்காக பேசி வாக்கு சேகரிக்கிறார். எலெக்ஷன் வந்தா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா.

இதை ஷேர் செய்திடுங்கள்: