முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாயில் குடியிருக்க விண்ணப்பித்த 20,000 பேர்: 600பேர் சீனர்கள்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

பீஜிங்: மே, - 1 - செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேற வந்த அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக உலகம் முழுவதுமிருந்து இருபதாயிரம் பேர் ஒரு வழி டிக்கெட் எடுத்துள்ளனர். அதில் 600 பேர் சீனாவை சேர்ந்தவர்களாம். டச்சு நாட்டில் இயங்கி வரும் லாப நோக்கமற்ற ஓர் நிறுவனம், வரும் 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை நிரந்தரமாக குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ாஒருவழிப் பயணமாக செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விரும்புவோர் தங்களது பெயர்களை பதிவு செய்துக் கொள்ளலாம்ா என 4 தினங்களுக்கு முன்னர் அந்நிறுவனம் அளித்த விளம்பரத்திற்கு வரவேற்பு அமோகமாம்.. செவ்வாய் கிரகத்தில், ஆண்டின் 6 மாத காலத்திற்கு தொடர்ந்து பூமியை தாக்கும் சாதாரண புயலை விட 6 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும், இந்த வானிலை அறிக்கையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நான்கே நாட்களில் செவ்வாய் கிரகத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து சுமார் 20 ஆயிரம் பேர் மனு செய்துள்ளனர். இவர்களில் 600 பேர் சீனாவைச் சேர்ந்தவர்களாம். இதுல நம்ம ஊர்காரர்கள் யாரும் இல்லை...! 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்