புனே வாரியர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்சை வென்றது

புதன்கிழமை, 15 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

ராஞ்சி, மே.16 - ஐ.பி.எல். - 6 போட்டியில் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத் தில் புனே வாரியர்ஸ் அணி 7 ரன் வித்தி யாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் புனே வாரியர்ஸ் அணி தரப்பில், எம்.கே. பாண்டே அதி ரடியாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவ ருக்கு பக்கபலமாக, கேப்டன் பிஞ்ச், ராபின் உத்தப்பா, மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஆடினர். 

கொல்கத்தா அணி சார்பில் சேனநாய கே 22 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, காலிஸ் மற்றும் பா லாஜி ஆகியோர் தலா 1 விக்கெட்எடுத் தனர். 

கொல்கத்தா அணி 171 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை புனே அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

கொல்கத்தா அணி தரப்பில், யூசுப் பதான் அதிரடியாக ஆடி 44 பந்தில் 72 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்று ம் 2 சிக்சர் அடக்கம். தவிர, டென்டஸ் சட்டே 42 ரன்னையும், கேப்டன் காம் பீர் 12 ரன்னையும், ஆர். பாட்டியா 10 ரன்னையும் எடுத்தனர். 

புனே அணி சார்பில், பர்னெல் 34 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பி. குமார் மற்றும் பாண்டே ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பாண்டே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: