முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீபுக்கு ஒபாமா வாழ்த்து

வியாழக்கிழமை, 16 மே 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மே.17  - பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில்  வெற்றி பெற்றுள்ள  பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின்  தலைவரும்,  அடுத்த  பிரதமராக பொறுப்பேற்க  உள்ளவருமான  நவாஸ் ஷெரீபுக்கு  அமெரிக்க அதிபர் பராக்  ஒபாமா வாழ்த்து  தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக  வெள்ளை மாளிகை  செய்திப் பிரிவு   செயலாளர்  ஜே கார்னே  கூறியதாவது: அதிபர்   ஒபாமா பாகிஸ்தான்   பிரதமராக   

பொறுப்பேற்க உள்ள நவாஸ் ஷெரீபுடன்  தொலைபேசியில் தொடர்பு  கொண்டு பேசினார்.  அப்போது,  மே 11 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலில்  ஷெரீப் கட்சி வெற்றி பெற்றதற்கு  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பாகிஸ்தான்  வரலாற்றில் முதன்முறையாக  

தொடர்ந்து 2 ஆவது முறையாக   ஜனநாயக  முறைப்படி  தேர்தல்  அமைதியாக,  வெற்றிகரமாக  நடைபெற்று இருப்பது  பாராட்டுக்குரியது என ஒபாமா, ஷெரீபிடம்  தெரிவித்தார்.  முதன்முறையாக  தேர்ந்தெடுக்கப்பட்ட    ஒரு அரசிடமிருந்து  மற்றொரு  

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம்   ஆட்சி கைமாற  இருப்பது  அந்நாட்டு   ஜனநாயக  வரலாற்றில் ஒரு மைல் கல் என்றும்  ஒபாமா 

தெரிவித்தார். நீண்டகாலமாக  அமெரிக்காவும்   பாகிஸ்தானும்  இணைந்து  செயல்பட்டு  வருகின்றன.    இரு நாடுகளுக்கிடையிலான  உறவை மேம்படுத்துவதற்கு   புதிய அரசுடனும்   தொடர்ந்து   நல்லுறவை வளர்க்க  விரும்புவதாக  ஒபாமா, ஷெரீபிடம் தெரிவித்தார் என்று  கார்னே கூறியுள்ளார்.  அமெரிக்காவுடன் இணைந்து 

செயல்படப் போவதாக ஷெரீப்  ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.   பாகிஸ்தானில்  மொத்தம்  உள்ள  272 நாடாளுமன்ற  இடங்களில்  ஷெரீப் கட்சி 123 இடங்களில்  வெற்றி 

பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு  பெரும்பான்மை  பலம் கிடைக்காத  நிலையில்,  சுயேச்சை உறுப்பினர்கள்  மற்றும்  சிறிய கட்சிகளின்   ஆதரவுடன்  ஷெரீப் ஆட்சி அமைக்க உள்ளார்.  இம்ரானுடன்   நவாஸ் சந்திப்பு : மருத்துவமனையில்  சிகிச்சை   

பெற்று வரும் தெஹ்ரீக் -இ-  இன்சாப் கட்சித் தலைவரும்  முன்னாள்  கிரிக்கெட்  வீரருமான இம்ரான் கானை செவ்வாய்க்கிழமை  இரவு நவாஸ் ஷெரீப்  சந்தித்து  நலம் விசாரித்தார்.  இந்த சந்திப்பின்போது,  வளமான  பாகிஸ்தானை  உருவாக்குவதற்கு  கருத்து வேறுபாடுகளை  மறந்து இணைந்து   பணியாற்ற வருமாறு  கானுக்கு, ஷெரீப்  அழைப்பு  விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இதன் மூலம்  ஷெரீப் தலைமையிலான ஆட்சியில்  இம்ரான்  கான் கட்சி இடம் பெறும் என தகவல்கள்  கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்