முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கைப்பாவையாக நிதீஷ்: லாலு

திங்கட்கிழமை, 20 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, மே.21 - பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கைப்பாவையாக உள்ளார் என்று பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்டிரீய தனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறினார். பாட்னாவில் நடைபெற்ற பேரணியை அடுத்து நிருபரிடம் அவர் கூறியதாவது: 

பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான அரசை பற்றி மக்களின் கருத்து என்ன எனபதை அறிய பேரணி நடைபெற்றது. நிதீஷ் அரசு பலவகையிலும், மக்களின்  எண்ணங்களை நிறைவேற்ற இந்த அரசு தவறிவிட்டது. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. உயர்நிலை, மேல்நிலைக் கல்வி முற்றிலுமாக பாழாகிவிடடது. இந்த மாநிலத்துக்கு ஒரு திட்டமும் வரவில்லை. இந்த மாநிலத்தில் கணினிகள் இல்லை. மின்சாரமும் இல்லை. ஆன்லைன் கல்வி பற்றி அரசு பேசி வருகிறது. நிதீஷ்குமாருக்கு வாக்களித்தவர்கள் தவறு செய்துவிட்டதாகவும். தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும் உணர்கிறார்கள். எம்எல்ஏ, ஊராட்சி தலைவர் கூட சங்கடப்படுகின்றனர். நான்தான் அவர்களுக்கு மாற்று என்று அவர்கள் கருதிகிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் 

லட்சக்கணக்கான மக்கள் பேரணியில கலந்து கொண்டனர். இது இந்த அரசுக்கு எதிரான மக்களின் கருத்தாகும். ஆர்.எஸ்.எஸ். தலைமையில்   பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்த முயற்சி செய்கிறது.  இந்த மதவாத சக்திகள் வெற்றிபெறப் போவதில்லை. எனவே இந்த நாட்டை பாதுகாக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுதிரள வேண்டும்.

மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் நிதீஷ்குமார் குலாவுகிறார். அவருக்கு விருந்து வைக்கிறார். பீகாருக்கு தனி அந்தஸ்து கிடைத்தால் மட்டும் போதுமா. தனி அந்தஸ்து கிடைக்க எவருடனும் கூட்டணி வைப்பேன் என்று நிதீஷ் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியுடன் நிதீஷ்குமார் விரைவில் போய் சேரலாம். அப்படி அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால், மகிழ்ச்சியடையும் நான் அனைவருக்கும் லட்டு வழங்குவேன். நிதீஷ்குமார் தேசிய ஜனநாயக முன்னணியிலிருந்து விலக மாடார். அவர் ஆர்.எஸ்.இயக்கத்தின் கைப்பாவையாக உள்ளார்.  

எல்லா மதச்சார்பற்ற சக்திகளையும் ஒன்று சேர்த்து மத்தியில் ஆட்சி அமைக்த நாங்கள் விரும்புகிறோம். சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று சிலர் கூறியதால் நான் சோனியாவுக்கு ஆதரவாக நின்றேன். அவருக்கு ஆதரவு அளித்தேன். 3-வது அணி என்ற கேள்விக்கே இடமில்லை.  எனது மகன்களை நான் கட்சியில் ஈடுபடுத்தவில்லை.  இப்போது நடைபெற்ற பேரணியில் அவர்கள் மேடைக்குகூட வரவில்லை. நாங்கள் மீண்டும் பீகாரில் ஆட்சிக்கு வருவோம் என்றார் லாலு பிரசாத் யாதவ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்