ஜப்பானிய தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது: பிரதமர் வழங்கினார்

புதன்கிழமை, 29 மே 2013      இந்தியா
Image Unavailable

 

டோக்கியோ, மே. 30 - ஜப்பானை சேர்ந்த தொபுரு கார்ஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். 80 வயதாகும் தொபுரு தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். இவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். 

இந்தாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் உடல்நிலை காரணமாக புது டெல்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்நிலையில் மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் பத்மஸ்ரீ விருதை தொபுரு கார்ஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான், இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தொபுருவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கவுரவித்தார். 

1964 ம் ஆண்டு டோக்கியோ பல்கலைக் கழகத்தில் கல்விப் பணியை தொடங்கிய தொபுரு 1974 ம் ஆண்டில் தெற்காசிய வரலாற்று துறையின் தலைமை பேராசிரியராக பொறுப்பேற்று 20 ஆண்டு காலம் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியராக உள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: