ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் பலி

புதன்கிழமை, 3 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, ஜூலை. 4 - ரஷ்யாவின் சைபீரியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். போலார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்- ஐ 8 ஹெலிகாப்டர் 3 விமானிகள், 25 பயணிகளுடன் ஜகா பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென வெடித்து சிதறியது. இதில் 19 பேர் இறந்ததாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் 23 பேர் இறந்ததாகவும், ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிர் பிழைத்ததாகவும் ஜகா பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யாகுடியா என்றழைக்கப்படும் ஜகா பகுதி பரந்து விரிந்து காணப்படுவதால் இங்கு மக்களின் போக்குவரத்துக்கு ஹெலிகாப்டர் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: