முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்த தடை

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.7 - தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக்கூட்டத்தை நடத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் கே.ஆர்.நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது:- தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் 7.7.13 (இன்று) பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கு தடைவிதிக்கக் கூறி  வழக்கு தொடர்ந்தோம்.உயர்நீதிமன்றமும் தடைவிதித்துள்ளது.மேலும் வருகிற 15ந்தேதிக்குள் ஓய்வு பெற்ற நீதிபதி நியமித்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. தலை நிமிர்ந்த தயாரிப்பாளர் சங்கத்தை சுயநலவாதிகள் கடந்த 22 மாதங்களாக செயல்படாமல் தடுத்துவிட்டனர். 

சங்கத்தின் வங்கி கணக்கில் ரூ.3 கோடி உள்ளது. அதை எப்படியாவது செலவழிக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் சங்கத்தின் மூலமாக சங்கத்தின் பணத்தில் ரூ.20 லட்ச ரூபாய் வரை கையாண்டுள்ளனர்.

தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 60 வயதுக்கு மேல் உள்ள தயாரிப்பாளர்களுக்கு ரூ.5000 உதவித்தொகையை கூட உரிமைத்தொகை என்று பெயர் மாற்றி அதையும் ஒழுங்காக வழங்கவில்லை.

தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து அவருக்கு எதிராக 204 பேரும், அவருக்கு ஆதரவாக 10 பேரும், ஒரு செல்லாத ஓட்டும், பதிவானது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்றபிறகும், இன்னும் தலைவர் பதவியில் ஏன் நீடிக்கிறார் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று இவர்கள் பதவியில் நீடிப்பதற்கு தடை வாங்கிய பிறகும் பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்திருப்பது கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. அனைத்து உறுப்பினர்களுக்கும் இலவச வீட்டு மனை தருவதாக புறளியை கிளப்பிவிட்டு துப்பாக்கி படத்தின் இலாபத்தில் பங்கு போட்டு கொண்டனர். சில தயாரிப்பாளர் சங்கத்தின் விதிகளை மீறி தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யும் தயாரிப்பாளர்களை எதிர்த்து பேசக்கூட எந்த நிர்வாகிக்கும் துணிச்சல் இல்லை. இவ்வாறு கே.ஆர் கூறினார். 

பேட்டியின் போது தயாரிப்பாளர்கள் கே.ராஜன் முருகன், வடிவேல், ராதாகிருஷ்ணன், செளந்தர், கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony