உலக தடகள சாம்பியன்ஷிப்: போல்டிற்கு வெற்றி வாய்ப்பு

புதன்கிழமை, 17 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை. 18 - மாஸ்கோவில் நடக்க இருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்டிற் கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கள் ரஷ்யாவின் தலைநகரான மாஸ் கோ நகரில் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்காக அந்நாடு பிரமாண்ட ஏற் பாடுகளை செய்து வருகிறது. 

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி யில் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்களது திறமையை வெளிப்படுத்த முன்ன ணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆர்வமாக உள்ளனர். ரசிகர்கள் இதற் காக காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் முன்னணி வீரர்கள் சிலர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி இரு ப்பது தடகள வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவின் 100 மீ ஓட்டப் பந்தய வீரரான டைசன்கேக், மற்றும் அசன் பாவெல் இருவரும் ஊக்க மருந்து சோ தனையில் சிக்கி உள்ளனர். 

அவர்களது சிறுநீர் சோதனைக்கு அனு ப்பப்பட்டதில் இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் இருவரு ம் மாஸ்கோ போட்டியில் பங்கேற்க முடியாது. 

இதே போல ஜமைக்காவைச் சேர்ந்த வட்டு எறியும் வீராங்கனை ஒருவரும் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி இரு க்கிறார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இது குறித்து முன்னணி வீரர்களான டைசன் கேக் மற்றும் பாவெல் இருவ ரிடமும் கேட்ட போது, தாங்கள் ஊக்க மருந்து எதனையும் உட்கொள்ள வில் லை என்றும், ஊக்க மருந்து தங்களது உடலுக்குள் எப்படி சென்றது என்று தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

இதே போல ஜமைக்காவின் முன்னணி வட்டு எறியும் வீராங்கனையும் தான் ஊக்க மருந்து எதனையும் உட்கொள்ளவில்லை என்று அடித்துச் சொல்கிறார். 

ஜமைக்கா வீரரான உசேன் போல்ட் 100 மீ ஓட்டப் பந்தயத்தில் 9.58 வினா டிகளில் கடந்து உலக சாதனை படை த்து இருக்கிறார். 100 மீ மற்றும் 200 மீ போட்டியில் பல பதக்கங்களை வெ ன்று உள்ளார். 

அவருக்கு அடுத்த இடத்தில் டைசன் கேக் 9.62 வினாடிகளில் வந்து 2- வது இடத்திலும், பாவெல் 9.71 வினாடியில் வந்து 3- வது இடத்திலும் உள்ளனர். 

எனவே உலக தடகள போட்டியில் டைசன் கேக் மற்றும் பாவெல் இருவரு ம் உசேனிற்கு போட்டியாக இருப்பார் கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், டைசன்கேக் மற்றும் பாவெல் இருவரும் ஊக்க மருந்து சோ தனையில் சிக்கி இருப்பதால் மாஸ் கோ போட்டியில் உசேன் போல்டிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப் படுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: