ஒரு நாள் போட்டி: இலங்கை தெ.ஆ. அணியை வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஜூலை. 22 - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக கொழும்பு நகரில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 180 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில் கீப்பர் சங்கக்கரா அபாரமாக பேட்டிங் செய்து சதம் அடித்து அணிக் கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவரு க்குப் பக்கபலமாக தரங்கா,ஜெயவர்த் தனே, திரிமன்னே மற்றும் பெரீரா ஆகி யோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, சி. பெரீ ரா மற்றும் ஹெராத் இருவரும் இணைந்து 6 முக்கிய விக்கெட்டைக் கைப்பற் றினர். அவர்களுக்கு ஆதரவாக தில்ஷா ன், மலிங்கா மற்றும் எரங்கா ஆகி யோர் பந்து வீசினர். 

தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டிவி ல்லியர்ஸ் தலைமையில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் சண்டிமால் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இலங்கை மற்றும் தெ.ஆ. அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்ட து. இதன் முதல் போட்டி கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா அரங்கத்தில் நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி தெ. ஆ. பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி பிரமா  ண்ட ஸ்கோரை எட்டியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரி ல் 5 விக்கெட்டை இழந்து 320 ரன்னை எடுத்தது. 

இலங்கை அணி தரப்பில் சங்கக்கரா சத ம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமா கும். அவர் 137 பந்தில் 169 ரன்னை விளாசினார். இதில் 18 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் அடக்கம். 

தவிர, ஜெயவர்த்தனே 51 பந்தில் 42 ரன் னையும், உபுல் தரங்கா 64 பந்தில் 43 ரன்னையும், திரிமன்னே 17 ரன்னையு ம், சி. பெரீரா 16 ரன்னையும், தில்ஷா ன் 10 ரன்னையும் எடுத்தனர். 

தெ.ஆ. அணி சார்பில், முன்னணி வேக ப் பந்து வீச்சாளரான மார்கெல் 34 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மோரிஸ், மெக்லாரன் மற்றும் பாங்கிசோ ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

தெ.ஆ. அணி 321 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இலங் கை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 31.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 140 ரன்னில் சுருண்டது. 

இதனால் இந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 180 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூல ம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. . 

தெ.ஆ. வீரர்கள் ஒருவரும் அரை சதத் தை தாண்டவில்லை. ஏ.என். பீட்டர்சென் அதிகபட்சமாக, 31 பந்தில் 29 ரன் னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அட க்கம். ஆர். ஜே. பீட்டர்சன் 37 பந்தில் 29 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரி அடக் கம். தவிர, கேப்டன் டிவில்லியர்ஸ் 23 ரன்னையும், டுமினி 15 ரன்னையும், மில்லர் 14 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான சி. பெரீரா 31 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். ஹெராத் 25 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, தில்ஷான் 2 விக்கெட்டும், மலிங்கா மற்றும் எரங் கா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக சங்கக்கரா தேர்வு செய்யப்பட்டார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: