பெட்ரோல் பங்குகளிலும் சமையல் கியாஸ் வாங்கலாம்

புதன்கிழமை, 24 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 25 - சமையல் கியாஸ் சிலிண்டர் தற்போது இரண்டு வகைகளாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 கிலோ எடை கொண்டது. வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் 19 கிலோ எடை கொண்டது. இந்த நிலையில் 5 கிலோ எடையுள்ள சமையல் கியாஸை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 381 ஆகும். 

டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 மெட்ரோ நகருடன் பெங்களூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இன்னும் 15 தினங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. 5 கிலோ எடையுள்ள இந்த சமையல் கியாஸை பெட்ரோல் பங்குகளில் வாங்கலாம். இதே போல் எண்ணெய் நிறுவனங்களில் இந்த சமையஸ் கியாஸ் சிலிண்டர் கிடைக்கும். 

5 கிலோ சமையல் கியாஸ் திட்டத்துக்கு மத்திய பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி ஒப்புதல் அளித்துள்ளார். 5 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் மானியம் இல்லாத விலை ரூ. 832 ஆகும். வர்த்தக ரீதியிலான கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 1375 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: