முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் தொடர்: இங்கி. 2-வது இன்னிங்சில் 330 ரன்னில் அவுட்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

செஸ்டர்லீ ஸ்ட்ரீட், ஆக.13 - இங்கிலாந்து அணிக்கு எதிராக செஸ்ட ர்லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர் 4-வது டெஸ்டில் ஆஸ் திரேலியஅணி 2-வது இன்னிங்சில் வெ ற்றி பெற 299 ரன் இலக்காக நிர்ணயிக்க ப்பட்டு உள்ளது. முன்னதாக விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 95.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 330 ரன்னை எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில், இயான் பெல் சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக்கு ஆதரவாக பிரஸ்னன், பீட்டர்சன்,  பேர்ஸ்டோ, கேப்டன் கூக், டிராட், மற்றும் ஸ்வான் ஆகியோர் ஆடினர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹாரிஸ் சிறப்பாக பந்து வீசி 7 முக்கிய விக்கெ ட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆத ரவாக லியான் பந்து வீசினார். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி செஸ்டர்லீ ஸ்ட்ரீட்டி ல் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன் னிங்சில் 92 ஓவரில் அனைத்து விக்கெ ட்டையும் இழந்து 238 ரன்னை எடுத்த து. அந்த அணி தரப்பில், கேப்டன் கூக் 51 ரன்னையும், டிராட் 49 ரன்னையும், பீட்டர்சன் 26 ரன்னையும், பிரையர் 17 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி 89.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 270 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில், ரோஜர் ஸ் 250 பந்தில் 110 ரன் எடுத்தார். தவிர, வாட்சன் 68 ரன்னையும், ஹாரிஸ் 28 ரன்னையும், ஸ்மித் 17 ரன்னையும் எடுத் தனர். 

அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய இங் கிலாந்து அணி 95.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 330 ரன்னை எடுத்தது.  

இங்கிலாந்து அணி தரப்பில், இயான் பெல் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்ப ம்சமாகும். அவர் 210 பந்தில் 113 ரன் னை எடுத்தார். இதில் 11 பவுண்டரி அடக்கம். தவிர, பிரஸ்னன் 90 பந்தில் 45 ரன்னையும், பீட்டர்சன் 44 ரன்னையு ம், கேப்டன் கூக் 22 ரன்னையும், டிராட் 23 ரன்னையும், பேர்ஸ்டோ 28 ரன்னையும், ஸ்வான் 30 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஹாரிஸ் சிறப்பாக பந்து வீசி 117 ரன்னைக் கொடு த்து 7 விக்கெட் வீழ்த்தினார். லியான் 55 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் கைப்ப ற்றினார். 

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சி ல் 299 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்கை இங்கிலாந்து அணி வைத்துள்ளது. பின்பு ஆஸி. அணி 2-வது இன்னிங்சைத் துவக்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்