முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: ஜோகோவிச் கால்இறுதிக்கு தகுதி

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூ, செப். 5 – கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீரரும், 2011–ம் ஆண்டு சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) 4–வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த மார்செலை எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 6–3, 6–0, 6–0 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 79 நிமிடங்களே தேவைப்பட்டது.

 

நடப்பு சாம்பியனும் உலகின் 3–ம் நிலை வீரருமான ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து) 6–7 (5–7), 6–1, 6–4, 6–4 என்ற செட்கணக்கில் இஸ் சோமினை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்தார்.

 

21–ம் நிலை வீரரான மைக்கேல் யூஜ்னி (ரஷியா) 6–3, 3–6, 6–7 (3–7), 6–4, 7–5 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் லைடன் ஹெயிட்டை போராடி வென்றார். ஹெவிட் 3–வது சுற்றில் முன்னணி வீரரான டெல்போட்ரோவை வீழ்த்தி இருந்தார்.

 

5–ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) 4–வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 9–ம் நிலை வீரரான வாவெர்னிகா (சுவிட்சர்லாந்து) 3–6, 6–1, 7–6 (8–6), 6–2 என்ற கணக்கில் பெர்டிச்சை வீழ்த்தி கால் இறுதிக்கு நுழைந்தார்.

 

நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) கால்இறுதியில் ஸ்பெயினை சேர்ந்த கர்லாவை எதிர்கொண்டார். இதில் செரீனா 6–0, 6–0 என்ற நேர்செட் கணக்கில் மிகவும் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

 

செரீனா அரைஇறுதியில் 5–ம் நிலை வீராங்கனையான நா லீயை (சீனா) சந்திக்கிறார். நா லீ கால்இறுதியில் 6–4, 6–7 (5–7), 6–2 என்ற கணக்கில் மகரரோவை (ரஷியா) வீழ்த்தினார்.

 

இரண்டாம் நிலை வீராங்கனையான விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) 4–6, 6–3, 6–4 என்ற கணக்கில் அனா இவானோவிக்கை (செர்பியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்