முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது: குர்ஷித்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.6  - சிரியா பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். சிரியாவில் அரசுப் படைகளுக்கும், புரட்சிப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் விஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறந்தனர். இதற்கிடையில் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டு வீசப்பட்டதற்கு இந்தியா உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. ஒப்புதல் இல்லாமல் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை மீறினால் சிரியாவுக்கு ஆயுதம் வழங்குவோம் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். 

இதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: 

சிரியா பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது. வன்முறைக்கு , வன்முறை பதில் அல்ல. இதை மேற்கத்திய நாடுகளும் ஒப்புக்கொள்ளும். சிரியா பிரச்சினையில் பல நாடுகள் தங்களது நிலையை தெரிவித்துள்ளன. சிரியா பிரச்சனை குழப்பமாக உள்ளது. இதில் ஓரளவு தெளிவு உண்டாகும்போது இந்தியா தனது நிலையை அறிவிக்கும். இந்த விஷயத்தில் அவசரம் காட்டக் கூடாது. பேச்சு வார்த்தை மூலம் நிலையான அமைதியைக் கொண்டுவர முடியும் என்று சல்மான்குர்ஷித்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்