எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,செப.21 - முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த ஆண்டு கேப்டன் டி.வி.க்கு அளித்த பேட்டியில், 'மக்கள் வரிப் பணத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளம்பரம் செய்கிறார்' என்று கூறினார்.இதையடுத்து அவர் மீது முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு விஜயகாந்த் இதுவரை ஆஜராகவே இல்லை. இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று வந்தது.?, அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜரானார்.பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி வரும் அக்டோபர் 30 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜயகாந்த், வளர்ச்சி பிடிக்காமல் ஜெயலலிதா என் மீது அவதூறு வழக்குகளை தொடுப்பதாக குற்றம் சாட்டினார்.முன்னாதாக விஜயகாந்த் கோர்டில் ஆஜராக வந்த போது அவருடன் ஏரளாமான தொண்டர்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


