முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிணைக் கைதிகளை மீட்க போராடும் நைரோபி படை

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நைரோபி, செப்.24 - கென்யாவின் நைரோபி  ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 200 பிணை கைதிகளை மீட்க 3-வது நாளாக பாதுகாப்புப்  படையினர் போராடி வருகின்றனர், இதற்கிடையே தீவிரவாதிகள் தாக்கியதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

நேரோபி நகரில் வெஸ்ட் கேட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். 

இந்த காம்ப்ளக்ஸில் மக்கள் பொருள்களை வாங்கும்போது 10 தீவிரவாதிகள் முகமூடியுடன் வந்து தாக்குதல் நடத்தினர். 3-வது மாடியில் புகுந்த அவர்கள்  சரமாரியாக சுட்டனர். இதில் 2 இந்தியர்கள் உள்பட 70 பேர் இறந்தனர். பாதுகாப்புப் படையினர் அங்கு சென்றனர். அதற்குள் சில தீவிரவாதிகள் பொதுமக்களோடு கலந்து தப்பிச் சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது. ஆனாலும் தீவிரவாதிகள் அந்த காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அந்த தளத்தில் எத்தனைபேர் உள்ளனர் என்று தெரியவில்லை. அங்கு 200பேர் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. 

அவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அவர்கள் தப்ப முடியாது என்று கென்யா அதிபர் உருகு கென்யாட்டா கூறினார். இதுவரை ஆயிரம்பேரை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். பிணைக் கைதிகளை மீட்க முயற்சி நடந்து வருகிறது என்றும் கென்யாட்டா கூறினார். மீட்புப் பணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். சோமாலியாவில் தீவிரவாதிகளை அடக்க தனது துருப்புகளை கென்யா அனுப்பியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோமானியா தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது ரேஜ் கூறுகையில், சோமாலியாவிலிருந்து, கென்ய படைகள் வாபஸ் ஆகும் வரை தாக்குதல் தொடரும் என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்