முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் நடந்த இரண்டு கோர விபத்தில் 19 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர்,மே.13 - ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு கோர விபத்துக்களில் 19 பேர் பலியானார்கள் மற்றும் 62 பேர் படுகாயம் அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் லலோனி கிராமம் அருகே நேற்றுமுன்தினம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு லாரியில் ஏறி தங்களுடைய சொந்த கிராமத்திற்கு வந்துகொண்டியிருந்தனர். லாரியானது ஆருவா-கா-நாலா என்ற இடத்திற்கு அருகே லாரி வந்துகொண்டியிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி லாரி தலைகுப்புற கவிழ்ந்ததில் 11 ஆண்கள் பலியானார்கள். விபத்தில் 9 ஆண்கள் அதே இடத்தில் பலியானார்கள். மேலும் 2 ஆண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். காயம் அடைந்த 50 பேர் ஜெய்பூர் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலி மாவட்டத்தில் இரண்டு கார்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 பேர் பலியானார்கள் மற்றும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பவ்ரா கிராம் அருகே நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!