எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாரணாசி, பிப்.23 - உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ருத்ரா எண்டர்பிரைசஸ் என்ற சிகரெட் கம்பெனிக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் மத்திய கலால் மற்றும் சுங்க இலாக அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். வாரணாசியில் உள்ள ருத்ரா எண்டர்பிரைசஸ் கம்பெனியில் நடைபெற்ற இந்த சோதனையின்போது பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கலால் மற்றும் சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகவும், விற்பனை விலையை விட மிகக்குறைவான விலையில் இந்த சிகரெட்டுகளை விற்றதாகவும் கிடைத்த தகவலை அடுத்தே அதிகாரிகள் இந்த தொழிற்சாலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் இரு குழுக்களாக சென்று நாடுமுழுவதும் 10 இடங்களில் இதுபோன்ற சோதனைகளை நடத்தினார்கள். கான்பூர், டெல்லி, மதுரா உள்ளிட்ட பல நகரங்களில் இந்த சோதனை நடைபெற்றது. வாரணாசியிலும் இந்த சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டனர். மேகாலயா கவர்னர் மாளிகை முன்னாள் செயலாளர் ஐ.வி.பாண்டேவுக்கு சொந்தமானதுதான் இந்த ருத்ரா எண்டர்பிரைசஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிகரெட் கம்பெனியின் சிகரெட்டுகள் தென்னிந்தியாவில்தான் அதிக அளவில் விற்பனை ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


