எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரீஸ்,அக்.23 - பிரான்ஸ் மக்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதருக்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன் பாபியஸ் கூறுகையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழில் செய்தி வெளியானவுடன் அமெரிக்க தூதருக்கு உடனடியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. என்றார்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக பிரான்சில் வெலியாகும் லேமாண்ட் நாளிதழில் வெளியான செய்தி வருமாறு, அமெரிக்க உளவுப்பிரிவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10_ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 8_ம் தேதி வரை பிரான்சில் உள்ள 7 கோடியே 3 லட்சம் பேரின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்துள்ளது.
இதன்மூலம் தீவிரவாதிகளின் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிவது மட்டுமே அதன் நோக்கமல்ல. பிரான்சின் முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்புகளை கண்காணிக்கவே அவற்றை பயன்படுத்தியதாக அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க உளவுப்பிரிவு ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடனின் பதிவிலிருந்து இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக லேமாண்ட் தெரிவித்துள்ளது. அந்த கருத்தை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மேனுவல் வேல்ஸ் கூறுகையில் இது மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. என்று தெரிவித்தார்.
லேமாண்ட் வெளியிட்ட செய்தியைப்போல் ஜெர்மனியிலிருந்து வெளியாகும் வாரப்பத்திரிகை யான டெர் ஸ்பீகல் லில் மெக்சிகோ நாட்டு முன்னாள் அதிபர் பெலிப் கால்டிரனின் மின்னஞ்சல் தகவல்களும் அமெரிக்க உளவுப்பிரிவால் திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விரைவில் உரிய விளக்கம் கேட்கப்படும் என் மெக்ஸிகோ அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


