முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சனை: முடிவில் மாற்றமில்லை: அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், அக்.28 - காஷ்மீர் பிரச்சனையில் எங்கள்முடிவில் மாற்றமில்லை என்று பாகிஸ்தானிடம் உறுதியாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுமாறு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார். இந்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் எங்கள்முடிவில் மாற்றமில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையில் இரு நாடுகளும் உரிய பேச்சுவார்த்தை நடத்த ஊக்குவிப்போம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நவாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தினார். ஷெரீபின் அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு முன்னரே காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுவதில்லை என்ற அ%ரிக்காவின் முடிவில் எந்கவித மாற்றமுமில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த பிரச்சனையை இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனையாகவே அமெரிக்கா கருதுகிறது என்று ஜென் சாகி கூறியுள்ளார். 

அமெரிக்க அமைதி கல்வி நிலையத்தில் பேசிய ஷெரீப், அமெரிக்கா, இந்தியா மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையே உறவு மேம்பட அதிக அளவில் ஆதரவு அளிக்கும். இரு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல ஊக்குவிப்போம் என்று கூறியுள்ளார். 

 

 

     

 

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்