முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிஸ் கோப்பை: செக் குடியரசு அணி மீண்டும் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பெல்கிரேடு, நவ.20 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் செக் குடியரசு அணி 3-2என்ற புள்ளிக் கணக்கில் சொ்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்ததைத் தக்கவைத்தது. சொ்பியாவில் உள்ள பெல்கிரேடு நகரில் இத்தொடரின் இறுதிச்சுற்று நடந்தது. இதில், சொ்பியாகவும் நடப்பு சாம்பியனான செக் குடியரசும் மோதின. டேவிஸ் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் எதிரணியுடன் 3 ஒற்றையா் மற்றும் 2 இரட்டையா் பிரிவு ஆட்டங்களில் மோதும். வெள்ளிகிழமை நடந்த ஆட்டத்தின் முடிவில் 1-1 என இரு அணிக்களும் சமநிலை பெற்றன. சனிக்கிழமை நடந்த  இரட்டையா் பிரிவு ஆட்டத்தில் செக் குடியரசின் பொ்டிச் மற்றும் ஸ்டீபானெக் ஜோடி  வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என புள்ளியில் முன்னிலை பெற்றது. ஞாயிற்றுகிழமை நடந்த ஒற்றையா் பிரிவில், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜோகோவிச், செக் குடியரசின் தாமஸ் பொ்டிச் மோதினா். இதில் 6-4,7-6.6-2 என்ற நோ் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலை பெற்றது. கடைசி ஒற்றையா் பிரிவில் செக் குடியரசின் ரடெக் ஸ்டீபானெக், சொ்பியாவின் துஸன் லாஜோவிச்சுடன் மோதினா். இதில் , 6-3, 6-1, 6-1 என்ற நோ் செட் கணக்கில் ஸ்டீபானெக் வெற்றி பெற்றார். இதன் மூலம் செக் குடியரசு 3-2 என முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. வெற்றி குறித்து ஸ்டீபானெக் கூறியது இது மிகவும் முக்கியாமான போட்டி போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போது எங்கள் அணி வெற்றி பெற்றது அன்று முதல் டேவிஸ் கோப்பை தொடரில் ஆட வேண்டும் என்பது என் விருப்பம் என்று தெரிவித்தார். சொ்பிய அணி ஜோகோவிச்சை மட்டுமே நம்பி களம் இறங்கியது. ஒற்றையா் பிரிவில் அவா், செக்குடியரசின் ராடெக் ஸ்டீபானெக் மற்றும் தாமஸ் பொ்டிச்சை வீழ்த்தினார். இதன் மூலமே சொ்பியா 2 புள்ளிகள் பெற்றது. முக்கியமான இரட்டையா் பிரிவில் அவா் ஆடாததே சொ்பியாவின் பின்னடைவுக்குக் காரணம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்