லண்டனில் 30 ஆண்டு அடிமையாக இருந்த பெண்கள் மீட்பு

Image Unavailable

 

லண்டன், நவ-24- லண்டனின் லம்பெத் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கடந்த 30 ஆண்டுகளாக அடிமையாக இருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் ஒரு அறக்கட்டளையிலிருந்து லண்டன் போலீஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு பெண் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய ரகசிய தேடுதல் வேட்டையில், பிரிட்டன், மலேசியா, அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த முறையே 30,69,57 வயதுடைய 3 பெண்களை ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர். இவர்கள் மூவரது உடலிலும் காயங்கள் இருந்ததுடன் மன உளைச்சலுடன் காணப்பட்டனர். இதில் 30 வயதுடைய பிரிட்டன் பெண் அந்த வீட்டுக்குள்ளேயே பிறந்ததாகவும், பிறந்தது முதல் வெளி உலகத்தைப் பார்த்ததே இல்லை என்றும் கூறப்படுகிறது.

 

இதுதொடர்பாக 67 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை லண்டன் மாநகர போலீஸின் ஆட்கடத்தல் பிரிவினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிட்டன் குடியுரிமை பெறவில்லை என தெரியவந்துள்ளது.

 

அடிமையாக இருந்த அயர்லாந்து பெண் ஐடிவியில் ஒளிபரப்பானஒரு குறும்படத்தைப் பார்த்துள்ளார். அப்படத்தின் இறுதியில், உதவிக்காக தமது அறக்கட்டளையை தொடர்புகொள்ளலாம் என அதன் நிறுவனர் பேட்டி அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அனீதாவை தொடர்புகொண்டு தங்களது நிலை பற்றி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ