அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்
1All India Forward Block seat sharing photo (1) (3216 x 2136)

 

சென்னை, பிப்.24 - வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு, ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேற்று மாலை (23.2.2011) அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளரும், மேற்கு வங்க மாநிலத்தின் வேளாண்மைத் துறை அமைச்சருமான நரேந்திரநாத் டே, தேசிய செயலாளரும், மாநில தேர்தல் பார்வையாளருமான ஜி.தேவராஜன், தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.எஸ்.ஜெயராமன், எம்.ராஜசேகர், தமிழ்மாநில நிதிச் செயலாளர் ஆர்.மாயத்தேவர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது. 

இந்நிகழ்ச்சியின்போது அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: