முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து ஊழலிலும் பிரதமர் - சோனியாவுக்கு தொடர்பு

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.2 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் முதல் நிலக்கரி சுரங்க ஊழல் வரை அனைத்திலும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சோனியாவுக்கும் தொடர்பு உண்டு என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். 

எல்.கே. அத்வானி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மிகப்பெரிய அளவில் பல ஊழல்கள் நடந்துள்ளன. இதில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் ரூ. ஆயிரம் கோடிக்கும் மேல் ஊழல் நடந்தது முதல் ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி வரை நடந்துள்ள நிலக்கரி சுரங்க உரிமம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் அனைத்திலும் பிரதமரை ஒதுக்கி தள்ள முடியாது என்றார்.

காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டு போட்டியில் நடந்த ஊழலுக்கு பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொடர்பு உண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குற்றஞ்சாட்டியது. பின்னர் இது பொய் என்று தெரியவந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து குறிப்பாக மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியானது மிகவும் மோசமானது. ஊழல் நிறைந்த காலமாகும். பிரதமர் மன்மோகன் சிங் எதை செய்தாலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதல் மற்றும் அனுமதியை பெறாமல் செய்யமாட்டார். அதனால் இந்த மெகா ஊழலில் இருந்து சோனியா காந்தியையும் பிரிக்க முடியாது என்று அத்வானி ஆணித்தரமாக கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணர். அப்படி இருந்தும் நாட்டின் பொருளாதார கொள்கையை தவறுதலாக கையாண்டதால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்தியில் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருந்தபோது எந்த மந்திரியோ அல்லது கூட்டணி கட்சியோ தவறு செய்தால் உடனே அந்த மந்திரியை அல்லது கட்சியை தட்டிக்கேட்பதோடு கூட்டணியில் இருந்து நீக்கிவிடுவோம். இதனால் எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்றும அத்வானி கூறினார். கடந்த 2008_ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது ஆளும் கட்சி சார்பாக லஞ்சம் கொடுக்கப்பட்டதை வெளிப்படுத்திய எங்கள் கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என்றும் அத்வானி மேலும் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony