ஜெயலலிதா நீடுழிவாழ வடபழனி கோயிலில் 2007 பெண்கள் பால்குடம்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்
ops1

சென்னை, பிப்.24 - ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 2007 பெண்கள் பால்குடம் எடுத்தனர்.ஜெயலலிதாவின் 63-வது பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஏழை, எளியோர்கள் சமூக நல திட்ட உதவிகள் ரத்ததானம், அன்னதானம் ஆகியவை செய்து வருகின்றனர். நேற்று அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஜெயலலிதா நீடுழிவாழ கோகுல இந்திரா தலைமையில் 2007 பெண்கள் பால் குடத்தை சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் பச்சை நிற புடவையுடன் திருவேங்கிஸ்வரன் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியை அ.தி.மு.க பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், கழக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.கலைராஜன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன், பகுதி செயலாளர் வீடியோ சரவணன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, சக்தி கோதண்டம், சி.ஆர்.சரஸ்வதி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: