ஜப்பான் பேரரசர் சென்னை வருகை: அமைச்சர் வரவேற்பு

Image Unavailable

 

சென்னை, டிச.5 - இந்தியாவில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பேரரசர் அகிஹிடோவும், ராணியார் மிசிகோவும் இரண்டு நாள் பயணமாக  நேற்று சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களை, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். 

இந்த சுற்றுப்பயணத்தின் முதல் நாளான  நேற்று மாலை ஜப்பான் அரச தம்பதியர், கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்றார்கள். கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவை பார்வையிடும் அவர்கள், மதியம் 12.15 மணியளவில் ஆளுநர் ரோசய்யாவை சந்திக்கின்றனர். 

ஆளுநர் அளிக்கும் விருந்திலும் அவர்கள் பங்கேற்கிறார்கள். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கின்றனர். பின்னர் இன்று அவர்கள் டோக்கியோவுக்கு புறப்பட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ