முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் 300 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது

புதன்கிழமை, 11 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

நாகப்பட்டினம், டிச.12 - தமிழக மீனவர்கள் 300 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. நாகப்பட்டினம் அக்கரைபேட்டை, நம்பியார்நகர், கீச்சாங்குப்பம் மற்றும் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித் துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற் படையினர் தமிழக மீனவர்களின் 36 படகுகளைச் சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த படகுகளில் சுமார் 300பேர் இருந்தனர். தங்களை  இலங்கை கடற் படையினர் பிடித்ததை சில மீனவர்கள் தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல்  தெரிவித்தனர். இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்வதும், இலங்கை சிறையில் அடைப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.  அமைதியாக மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் தாக்கியும் படகுகளை சேதப்படுத்தியும் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் %ய்து வருகிறது.

இதுபற்றி அவ்வப்போது, பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி மீனவர்களை பாதுகாக்குமாறு கோரி வருகிறார். ஆனால் மத்திய அரசு இதில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. இது அந்நிய நாட்டு பிரச்சனை என்று மத்திய அரசு கருதுவதுபோல்  உள்ளது. 

 இலங்கை கடற் படையினரால் ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் எல்லை கடந்து வந்து  மீன் பிடித்ததாக இலங்கை கடற் படையினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இலங்கை கடற் படையினர் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் அவர்கல் துணிந்து தமிழக மீனவர்களை தாக்கி வருகின்றனர். தமிழக மீனவர்கள் தங்கள் துயரம் எப்போதுதான் தீரும் என்று வேதனையுடன் உள்ளனர். இது விஷயத்தில் மத்திய அரசு தகுந்த நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறுமா அல்லது வெறும் பகல் கனவாகத்தான் போகுமா என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்