எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்கா, ஜன. 14 - வங்கதேசத்தில் 3_வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த மாதம் 5_ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 300 இடங்களில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி பெரும் பான்மை இடங்களை பெற்று வெற்றி பெற்றது.
இதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் ஷேக் ஹசீனா நேற்று முன் தினம் 3 _வது முறையாக பிரதமர் பதவியேற்றார்.
அவருக்கு அதிபர் அப்துல் ஹமீது பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஹசீனாவுடன் 48 பேர் அமைச்சர் பதவியேற்றனர்.
தேர்தலுக்கு எதிராக முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
இதில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வன் முறையில் 150 _க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பெரும்பாலான கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் ஜனநாயக முறைப்படி மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
எனினும் ஷேக் ஹசீனா பிரதமராக பதவியேற்றார். அவருக்கு இந்திய பிரதமர் மன்மோசன் சிங் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பதவியேற்பு விழாவில் இந்திய தூதர் பங்கஜ் சரண், அமெரிக்க தூதர் டான் மோசெனா, இங்கிலாந்து தூதர் ராபர்ட் கிப்சன் உள்ளிட்ட பல நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


