Idhayam Matrimony

சவுதியில் இந்தியரின் தலை துண்டித்து மரண தண்டனை

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2014      இந்தியா
Image Unavailable

 

ரியாத், பிப். 1 - சவுதியில் தனக்கு வேலை கொடுத்த முதலாளியை அடித்து கொன்ற இந்தியரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

சதுவுதியில் உள்ள ரியாத்தில் வசித்தவர் தாபெர் பின் முகமது அல் துஷாரி. இவரிடம் இந்தியாவைச் சேர்ந்த முகமது லத்தீப் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். 

வளைகுடா நாடுகளில் வேலைக்கு வரும் வெளிநாட்டு தொழிலாளர்களை அங்குள்ள ஸ்பான்சர் எனப்படுபவர்கள் தான் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொள்கின்றனர். 

இதனால் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவவதாக அடிக்கடி பிரச்சினைகள் எழுவதுண்டு. 

சம்பவத்தன்று தாபெர் பின் முகமது அல் துஷாரியை கத்தியால் குத்தி அவரது உடலை கிணற்றில் வீசியுள்ளார் முகமது லத்தீப். 

சில தினங்களுக்கு பிறகு, இந்த கொலை தொடர்பாக முகமது லத்தீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ரியாத் நீதிமன்றம் முகமது லத்தீப்புக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 

அந்த உத்தரவின் படிநேற்று முன் தினம் முகமது லத்தீப்புக்கு வாளால் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

கடந்த 2013 ல் மட்டும் பல்வேறு குற்றங்களுக்காக சவுதியில் 78 பேரின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இது போன்ற கொடூரமான மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச பொது மன்னிப்பு கழகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago