முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் ஆளில்லா விமான தாக்குதலை குறைக்க முடிவு

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப்.8 - அல்கய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள  நடவடிக்கை யில்  ஏ ற்படும் முன்னேற்றேத்தினால்  பாகிஸ்தானில் நடத்தப்பட்டுவரும் ஆ ளில்லா விமானத் தாக்குதல்கள் குறைக்கப்படும் என  அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அரசு உயர் அதிகாரிகளை மேள்கோள் காட்டி அந்நாட்டின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில் அதிபர் ஒபாமா தலைமையிலான  அமெரிக்க அரசு நிர்வாகம் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் சர்சைக்குரிய ஆளில்லா விமானத் தாக்குதலைக் குறைததுக்கொள்ள இருக்கிறது. தலிபான் அமைப்பின் முக்கிய தீவிரவாதிகளை குறிவைத்து  மட்டுமே ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்படும்.  பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பதவிக் காலத்துக்குள் அந்த தாக்குதல்கள் அனைத்தையும் நிறுத்திக்கொள்ளவும் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். அதே சமயம் பிடிஐ  செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர்  கேட்லின்  ஹேடன்,  தேசிய பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தில் பேசிய அதிபர் ஒபாமா அல்காய்தாவுக்கு எதிராக மேற்கொ ள்ளப்பட்டுள்ள நடவடிக்கையில் ஏற்படும் முன்னேற்றம் ஆலில்லா விமானத் தாக்குதலின் அவசியத்தை குறைத்து விடும் என தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

பாகிஸ்தான் அரசுக்கும்,   அல்காய் தாவுடன்  தொடர்புடைய தலிபான் தீவிரவாதிகளுக்கும்  அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதை ஏற்றுக்கொண்சே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்