கருத்து வேறுபாடுகளை தீர்ப்போம்: அமெரிக்கா வலியுறுத்தல்

Image Unavailable

 

வாஷிங்டன்,பிப்10 - இந்தியாவுடன் அமெரிக்கா வைத்துள்ள உறவு, நெருடலான சில பிரச்சினைகளால் குலைந்து விட அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்திய தூதர் தேவயானி கைது செய்யப்பட்டு அவமரியாதைக்கு உள்ளான விவகாரத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலைமையை குறிப்பிட்டே ரைஸ் மேற்சொன்ன கருத்தை வெளியிட்டுள்ளார்.

வாஷிங்டனில் ஆஸ்பன் இன்ஸ்டிடியூட் அமெரிக்கா-இந்தியா விவாத மேடையில் பங்கேற்று வெள்ளிக்கிழமை ரைஸ் ஆற்றிய உரை வருமாறு:-

அதிகார பலமிக்க நாடுகள் இடையேயான உறவில் பின்னடைவுகள் வருவது இயல் பானதுதான். அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு இடையேயான ஒத்துழைப்பு முயற்சிகளை புறந்தள்ளி கருத்து வேறுபாடுகள் மீதே கவனத்தை திருப்புவதாக அமைந்தது, நமக்கு இடையேயான உறவின் அளவைப் பார்க்கும்போது இந்த நெருடல் சம்பவங்கள் பெரிதான தல்ல. நமக்குள் இணைந்து செயல்பட்டால் பெரிய அளவில் சாதிக்க முடியும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறவின் தன்மையைக் கருதி ஆக்கபூர்வ வழியில் கருத்து வேறுபாடுகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். வளமை, பாதுகாப்புமிக்க எதிர்காலத்தை அமைக்க நாம் கைகோத்து பாடுபட்டுவரும் நிலை யில் இந்த சவால்கள் எதிர்காலத்தை குலைத்துவிடக்கூடாது. உலகின் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவு வலுப்பட ஒபாமா நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.

21-ம் நூற்றாண்டின் உறவுக்கு உதாரணமாக திகழக்கூடியதாக இந்தியா, அமெரிக்கா இடையே யான ஒத்துழைப்பு அமைய வேண்டும். அந்த ஒத்துழைப்பு பலனை தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய ஒத்துழைப் பைத்தான் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் அமைத்திருக்கிறோம்.

நல்லுறவு ஏற்பட கடந்த 20 ஆண்டுகளாக இரு நாட்டு அரசுகளும் கடுமையாக பாடுபட்டு வருவது இந்திய-அமெரிக்க உறவு மேலும் வளரவே உதவும். இந்தியாவில் நடக்கவுள்ள பொதுத் தேர்தல் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிற நம்பிக்கை இருக்கிறது. கருத்து வேறுபாடுகளை களைய கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவும் அமெரிக்காவும், அதிபர்களும், பிரதமர்களும், அரசியல் கட்சி களும் ஒன்று கூடி தீர்வு காண முயற்சி எடுத்துள்ளனர்.

பல துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றன. உலக அரங்கில் முக்கிய பொறுப்புகளை ஏற்று செயல்படுகிறது இந்தியா. வர்த்தகம், முதலீட்டுத் துறை களில் வாய்ப்புகளை விரிவு படுத்த வேண்டும். அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா மீது ஏமாற்றம் இருக்கிறது. இதுபோன்ற முக்கிய விவகாரங்களில் உடனடியாக தீர்வு கிடைத்துவிடாது என்பது தெரியும்.

ஏற்கெனவே கூட்டாக தொடங்கி யுள்ள முக்கிய நடவடிக்கைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வோம். இலங்கையில் நல்லிணக்க சூழல் மேம்பட ஐநா மனித உரிமை கவுன்சிலில் இணைந்து செயல்படுவோம். மூன்றாம் நாடுகளில் நடைபெறும் தேர்தல்களுக்கு ஆதரவு வழங்கு வோம். ஐ.நா. ஜனநாயக நிதியம் அமைய உதவுவோம்.

மகளிர், இன, மத சிறுபான் மைக்குழு உறுப்பினர்கள், தன்பாலின உறவாளர்களின் உரிமைகள் சொந்த நாட்டி லும் வெளிநாடுகளிலும் பாதுகாக்கப் பட நடவடிக்கை எடுக்கத் தொடங்குவோம். இவ்வாறு  சூசன் ரைஸ் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ