முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தார் ஓபன்: இவானோவிக் முதல் சுற்றில் வெற்றி

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

டோகா, பிப். 13 -கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பிய வீராங்கனை அனா இவானோவிக் வெற்றி பெற்று 2_வது சுற்றுக்கு முன்னேறினார். 

கத்தார் தலைநகர் டோகாவில் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களம் இறங்கிய உள்ளனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் செர்பிய வீராங்கனை அனா இவானோவிக்கும், சுலோவேக்கிய வீராங்கனை டேனிலா ஹன்ட்சோவாவும் மோதினர். 

முதல் செட்டில் இவானோவிக் 7_5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஒரு கட்டத்தில் 5_5 என்ற முன்னிலை பெற்று இருந்த ஹன்ட்சோவாவை தனது அதிரடி ஆட்டம் மூலம் பின்னுக்கு தள்ளினார் இவானோவிக். 

2_ வது செட்டில் 1_ 0 என்ற கணக்கில் இவானோவிக் முன்னிலை பெற்று இருந்த போது ஹன்ட்சோவாவிற்கு காயம் ஏற்பட்டது. 

இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து இவானோவிக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2_வது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் அலிசா கெலிபரோவாவும், சுலோவேக்கிய வீராங்கனை டொமினிக்கா சிபுல்கோவாவும் மோதினர். 

முதல் செட்டில் 5_ 5 என்ற சமநிலையில் இருந்தனர். அப்போது சிபுல்கோவாவிற்கு வயிறு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. 

அவரால் தொடர்ந்து ஆட முடியவில்லை. போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து கெலிபரோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்