முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்: கோக்லி முன்னேற்றம்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், பிப். 21 - ஐ.சி.சி. வெளியிட்டுள்ள சமீபத்திய டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலில் இந்திய முன்னணி வீரரான விராட் கோக்லி 9 _வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். டெஸ்ட் தரவரிசையில் அவர் பெற்ற அதிகபட்ச முன்னேற்றம் இது. 

நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியதன் மூலம் அவர் 11_வது இடத்திலிருந்து 9_வது இடத்தைப் பிடித்தார். 

நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 இன்னிங்சிலும் சேர்த்து கோக்லி 214 ரன் எடுத்து உள்ளது குறிப்பிடத்தக் கது. 

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கோக்லி 105 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் தான் அந்தப் போட்டி டிராவானது. 

விராட் கோக்லி தவிர, டெஸ்ட் தரவரிசையில் டாப் _10 இடத்தைப் பிடிந்த மற்றொரு இந்திய வீரர் புஜாரா மட்டும் தான். அவர் 7_வது இடத்தில் உள்ளார். 

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்கள் பின்தங்கி 10_வது இடத்திற்கு வந்துள்ளார். 

எனினும் இந்திய பந்து வீச்சாளர்களில் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் அவர் தான். அவருக்கு அடுத்தபடியாக பிரக்ஞான் ஓஜா 12_வது இடத்தில் இருக்கிறார். 

இந்தியாவுக்கு எதிரான 2_வது டெஸ்டில் முச்சதம் அடித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்குல்லம் 8 இடங்கள் முன்னேறி 12_வது இடத்திற்கு வந்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் அவர் பெற்றுள்ள அதிக முன்னேற்றம் இது. 

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தவிர, இலங்கை வீரர் குமார் சங்கக்கரா மற்றும் மே.இ.தீவு வீரர் சிவநாராயண் சந்தர்பால் ஆகியோர் 2 மற்றும் 3_வது இடத்தில் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்