அடுக்குமாடி குடியிருப்பில் கேஸ் வெடித்து பெண் பலி

புதன்கிழமை, 5 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

நியூஜெர்சி, மார்ச்.6 - நியூஜர்சியின் புறநகர் பகுதியான எவிங் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுல் கேஸ் செல்லும் குழாயில் அடைப்பை சரி செய்யும் பணியில் இன்று காலை தொழிலாளர்கள் ஈடுபட்டன. அப்போது குழாய்குள் அடைபட்டிருந்த கேஸ் கசிந்து வெடித்து சிதறியது. இதனால் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. அக்குடியிருப்பில் இருந்த 10 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் 45 வீடுகள் பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் வசித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட 2 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து நியூஜர்சி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: