முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அமைச்சர்கள் விவகாரம்: ஜெட்லி - சுஷ்மா கருத்து வேறுபாடு

திங்கட்கிழமை, 30 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 30 - கர்நாடக அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் விவகாரத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு தலைவர்களிடையே மோதலை உருவாக்கி உள்ளது.  கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு ஊழல் மிகுந்த அரசாக உள்ளது. இதற்கு முழு காரணமாக இருப்பவர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களது ஊழலுக்கு பக்கபலமாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இருந்து வருகிறார். அமைச்சரவையில் ரெட்டி சகோதரர்கள் சேர சுஷ்மாவே காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சுஷ்மா, ரெட்டி சகோதரர்கள் அமைச்சரவையில் சேர மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லியே காரணம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. மாறாக அருண் ஜெட்லி, முதல்வர் எடியூரப்பா, அனந்தகுமார் மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோரே ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்க்க பரிந்துரைத்தனர் என்றார்.
ஆனால் ரெட்டி சகோதரர்கள் விவகாரத்தில் சுஷ்மா, அருண் ஜெட்லி இடையே மோதல் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை முன்னாள் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இது முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்க்கும் விஷயத்தில் ஜெட்லி ஆலோசனைகள் வழங்கியிருக்கலாம். இதில் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார். ஆனால் சுஷ்மாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து அருண் ஜெட்லி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா,
ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்க்க யாரும் என்னை நிர்பந்திக்கவில்லை. முதல்வர் என்ற முறையில் அமைச்சரவையில் யாரையும் சேர்க்க எனக்கு தனிப்பட்ட அதிகாரம் உண்டு என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்