எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 30 - தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அடித்துவரும் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் வெவ்வேறு விதமான கல்விக் கட்டண விகிதங்கள் வசூலிக்கப்பட்டு வந்ததாலும். அதீதமான கட்டண உயர்வுகளைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைவு செய்ய 2009ம் ஆண்டு தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்படடது.
nullநீதியரசர் கோவிந்தராசன் தலைமையில் அமைந்த இந்த ஆணையம் கொடுத்த பரிந்துரையின்படி கடந்த கல்வி ஆண்டில் (2010-2011) அனைத்துப்பள்ளிகளும் கல்விக்கட்டணங்களை வசூலித்துக் கெள்ளலாம் என அரசு ஆணையிட்டது. அதை மீறி பெரும்பாலான பள்ளிகள் தங்கள் விருப்பப்படி கட்டணங்களை வசூல் செய்தனர். சில பள்ளிகள் ரசீது இல்லாமலும், மறைமுகமாகவும், நன்கொடை வாயிலாகவும் ஆக பல வழிகளில் கல்விக்கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி செயல்பட்டனர்.
இதன் காரணமாக, தமிழகமெங்கும் பெற்றோர்களும், மாணவர்களும் கட்டணக் கொள்ளையைத் தடுக்கக் கோரி, சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெருவில் இறங்கிப் போராட்டங்களை நடத்தினர். மறுபுறத்தில், பள்ளி நிர்வாகங்கள் nullநீதிமன்றத்தை நாடின.
இறுதியில், nullநீதிமன்ற ஆணையின்படி, நீnullதியரசர் கோவிந்தராசன் பரிந்துரைத்த கட்டண விகிதங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிய சுமார் 6,500 பள்ளிகளின் மனுவை ஆணையம் பரிசீலனை செய்து தனது முடிவை அறிவிக்க வேண்டும் எனவும், அதுவரை ஆணையம் ஏற்கனவே பரிந்துரைத்த கல்விக்கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டுமெனவும், ஏற்கனவே கூடுதலாக வசூல் செய்து இருந்தால் கூடுதல் தொகையை பள்ளிகள் தனியாக வைப்பு நிதியில் வைக்க வேண்டுமெனவும் ஆணையிடப்பட்டது.
இந்தச் சூழலில், கடந்த ஆண்டு இறுதியில் nullநீதியரசர் கோவிந்தராசன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து nullநீதியரசர் ரவிராஜபாண்டியன் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து 6,500 பள்ளிகளின் கோரிக்கை அவரால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, அடுத்த கல்வியாண்டு (2011-2012) துவங்குகிற பின்னணியில், புதிய பரிந்துரைகள் ஏதும் வெளிவராத நிலையில், nullநீதியரசர் கோவிந்தராசன் பரிந்துரைத்த கட்டணங்கள் மட்டுமே கண்டிப்பாக பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகமெங்கும் தனியார் பள்ளிகள் மீண்டும் தங்கள் விருப்பத்திற்கு கல்விக் கட்டணங்களை வசூல் செய்து வருகின்றனன. பல இடங்களில் பெற்றோர் / மாணவர் ஆகியோரின் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சட்டத்தை அமலாக்கவும், சட்டப்படியான கல்விக் கட்டணங்கள் வசூலாவதை ஒழுங்குபடுத்தவும் வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. மேலும், நீnullதியரசர் ரவிராஜபாண்டியனின் பரிந்துரைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டுமென்பதையும் வற்புறுத்துகிறது.
சட்டத்தை மதிக்காது, கல்விக் கட்டணக் கொள்ளை நடத்தி வரும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


