மகனை மீட்க நடிகை வனிதா உண்ணாவிரத போராட்டம்

Image Unavailable

 

சென்னை, மே.31 - தனது மகனை தன்னிம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் கணவர் ஆகாஷ் வீட்டுமுன்பு நடிகை வனிதா விஜயகுமார் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அப்போது ங்கு வந்த விருகம்பாக்கம் போலீசார்  அவரை கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.  இது குறித்த விபரம் வருமாறு:

நடிகை வனிதாவுக்கும் அவரது முதல் கணவர் ஆகாசுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை இருவரும் தங்களிடம் ஒப்படைக்க கோரி போராடி வருகின்றனர். தற்போது விஜய் ஸ்ரீஹரி ஆகாஷ் வசம் இருக்கிறான். அவனை தன்னிடம் ஒப்படைக்கும்படி வனிதா வற்புறுத்தி வருகிறார். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விஜய் ஸ்ரீஹரி வாரத்தில் 3 நாட்கள் வனிதாவிடம் இருக்க வேண்டும் என்றும் மற்ற நாட்கள் ஆகாஷ் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு தீர்ப்புப்படி மகனை ஆகாஷ் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வனிதா நேற்று முன்தினம் புகார் அளித்தார். இப்பிரச்சினை மீது போலீசார் விசாரணை நடத்தினர்.

 விஜய் ஸ்ரீஹரியிடம் போலீசார் பேசினர். அப்போது அவன் வனிதாவுடன் செல்ல பிடிவாதமாக மறுத்து விட்டான். இதையடுத்து விஜய் ஸ்ரீஹரியை குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தியது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க வற்புறுத்தி வனிதா நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 

காலை 12 மணிக்கு படுக்கையுடன் சாலிகிராமம் லோகையா வீதி 5​வது குறுக்கு தெருவில் உள்ள ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். தனது பெண் குழந்தையையும் உடன் அழைத்து வந்தார். ஆகாஷ் வீட்டு முன் படுக்கையை விரித்தார். அதில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். வனிதாவிடம் அவர்கள் சமரசம் பேசினர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 உண்ணாவிரதம் இருப்பது பற்றி வனிதா கூறியதாவது:​ 

எனது மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கடந்த 7 மாதங்களாக ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வந்து விட்டேன். ஆனாலும் எனக்கு nullதி கிடைக்கவில்லை. என் குழந்தையை என்னுடன் அனுப்ப ஆகாஷ் மறுக்கிறார். என்னைப் பற்றி தவறான தகவல்களை ஸ்ரீஹரியிடம் சொல்லி என்னுடன் சேர விடாமல் மிரட்டுகிறார். என் குழந்தை இல்லாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன். தண்ணீர், சாப்பாடு, கூட சாப்பிட மாட்டேன். இங்கிருந்து என் குழந்தையோடுதான் செல்வேன். இல்லையென்றால் சாவேன். ஆகாஷ் செய்யும் தவறை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கீழ்மட்டத்தில் உள்ள போலீசார் தவறு செய்கிறார்கள். என் குழந்தை என்னிடம் சேராமல் இருப்பதற்கு போலீசாரும் ஒரு காரணம். இந்த அரசு மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. என் குழந்தையை என்னிடம் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். பெத்த குழந்தையை மீட்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்சினைக்கு பின்னால் என் தந்தை இருக்கிறார். கோர்ட்டு உத்தரவுபடி என் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு வனிதா கூறினார். 

வனிதா உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:​ 

கோர்ட்டு உத்தரவுபடி விஜய் ஸ்ரீஹரி விருப்பபட்டால் வனிதாவை 3 நாட்கள் சந்திக்கலாம். அவன் தனது தாயாரை பார்க்க விருப்பம் இல்லாத பட்சத்தில் அவனை சமாதானப்படுத்தி தாயார் வனிதாவிடம் அனுப்பலாம். ஆனால் அவன் போக மறுக்கிறான். தாயார் குழந்தையிடம் அன்பாக இருந்தால் பாசத்துடன் செல்லும். அவனை வனிதாவிடம் செல்ல கட்டாயப்படுத்தினால் அவரிடம் செல்ல மறுத்து அடம் பிடிக்கிறான். அதனால் மனோத்துவ டாக்டரை அணுகி குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறேன். 3 வருடம் குழந்தை ஹரி வனிதாவிடம் இருந்தது. இப்போது 3 நாள் அவருடன் அனுப்புவதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. என்னிடம் இருந்து அவன் செல்ல மறுக்கிறான். ஆனால் வலுக்கட்டாயமாக வனிதா இழுப்பதால் வெறுக்கிறான். இதனால் திடீர் என்று அவன் எப்படி மாறுவான். இவ்வாறு ஆகாஷ் கூறினார். 

இதனிடையே வனிதா தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். போலீசார் அவரை சமாதனப் படுத்தம் முயற்சி தோல்வி அடைந்ததால் வனிதைவை போலீசர் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை விடுதலை செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்