முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனி ஓபன் : மரியா ஷரபோவா காலிறுதிக்கு முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மியாமி, மார்ச். 26 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் சோனி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா 4_வது சுற்றில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். 

ஆடவருக்கான ஏ.டி.பி. சங்கமும், மகளிருக்கான டபிள்யு.டி.ஏ. சங்கமும் இணைந்து மியாமி நகரில் சோனி ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்தி வருகின்றன. 

இந்தப் போட்டி கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதில் சாம்பிய?ன் பட்டைத் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். 

இதில் பங்கேற்று வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். அவர்களது திறன் கண்டு ரசிகர்கள் வியப்படைந்து உள்ளனர். 

கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் இந்தப் போட்டி தஹ்போது காலிஹுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 4 _வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. 

இதில்ரஷ்ய முன்னணி வீராங்கனையாந மரியா ஷரபோவாவும், பெல்ஜியம் வீராங்கனை பிலிப்கென்சுவும் மோதினர். இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இருவரும் கடுமையாகபோராடினர். 

3 செட் கொண்ட இந்த ஆட்டத்தின் இஹுதியில் விம்ஏபிள்டன் முன்னாள் சாம்பியனான ஷரபோவா 3_6, 6_ 4, 6_ 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 

முன்னதாக நடந்த முதல் செட்டில் பெல்ஜியம் வீராங்கனை பிலிப்கென்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மரிஆயாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இறுதியில் 6_3 என்ற செட் கணக்கில் வென்றார். 

இதனால் ஆவேசமடைந்த ஷரபோவா 2_வது செட்டின் துவக்கம் முதல் அபாரமாக ஆடினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இறுதியில் அவர் 6_4 என்ற செட் கணக்கில் வென்ஹார். 

எனரே ஆட்டத்தை தீர்மானிக்கக் கூடிய கடைசி செட்டில் கடும் போராட்டம் நீடித்தது. இருவரும் மாறி மமாறி புள்ளிகள் பெற்றனர். கடைசியில்மரியா 6_1 என்ற கணக்கில் ரென்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்