தமிழ் புத்தாண்டுக்கு சித்திரை முதல் நாளே பொருத்தமான நாள்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.1 - சித்திரை முதல் நாளே தமிழ்புத்தாண்டுக்கு பொருத்தமான நாள். எனவே அதையே அறிவிக்கவேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஆதினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை ஆதீனம் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒருகடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

சித்திரை முதல்நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு, பாரம்பரியமான தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அனைவராலும் கொண்டாடப்படும் புனிதநாள். இந்த சித்திரை முதல்நாள் தமிழ்ஆண்டின் தொடக்க நாளாகும். இந்நாளில் ஆலயங்களிலும், ஆதீனங்களிலும், திருமடாலயங்களிலும் சிறப்பான பூஜைகளுடன் வழிபாடுகள் நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. எல்லா இடங்களிலும் சித்திரை முதல் நாள் அன்று பஞ்சாங்கம் படிக்கின்ற சம்பிரதாயங்கள் தொடர்பு இருந்து வருகின்றன. அன்றைய தினம் ஆண்டின் தொடக்க நாளாகும். பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு நாட்டின் நிலை குறித்தும் பல்வேறு விஷயங்கள் விலைவாசி பற்றியும் அரசாங்கத்தின் மக்கள் மீதான பல நல்வாழ்வு பற்றிய திட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ளமுடியும். மனித சமுதாயம் நல்வாழ்வு வாழ வழிகாட்டும் இந்த திருநாள் முத்திரை பதிக்கும் காணத்தினால் சித்திரையை, வா, வாழ்வில் முத்திரை பதிக்க வா என்ற அடிப்படையில் தமிழ் புத்தாண்டு தினமாக சித்திரை முதல் நாளை அறிவிக்க பொருத்தமான நாள் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: