முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அரசை பாராட்டும் தீர்மானத்தை மறுப்பதா?

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.1 - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. அரசை பாராட்டும் தீர்மானத்தை மறுப்பதா? என்று கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்னர்.இதுகுறித்த விபரம் வருமாறு: மாநகராட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் தேவி, இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் எழுந்து,  நீnullங்கள் தீர்மானத்தை நேற்றுதான் கொடுத்தீர்கள். குறைந்தது 8 நாட்களுக்கு முன்பு கொடுத்திருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீnullங்கள் கொடுக்கும் தீர்மானம் அவசியமானதா? நிறைவேற்ற வேண்டுமா, வேண்டாமா என்பது மேயரின் முடிவு. இப்போதைக்கு உங்களது தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்ற இயலாது  என்றுமேயர் மா.சுப்பிரமணி தெரிவித்தார்

 மீனா (இந்திய கம்யூ):​ தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இது முக்கியமான அரசை பாராட்டு தீர்மானம். எனவே இதை நிறைவேற்ற வேண்டும்.

 மேயர்:​ உங்கள் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த மன்றத்தில் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது.

 தேவி:​ தமிழ்நாட்டில் புதிய அரசு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் மூலம் புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தல் வெற்றிக்குகூட மாநகராட்சி கூட்டத்தில் பாராட்டு தீர்மானம் கொண்டு வந்திருந்தோம். ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டுவர அனுமதித்து இருக்க வேண்டும். புதிய அரசை வாழ்த்த மேயருக்கு மனம் இல்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 சுப்பிரமணி (இந்திய கம்யூ):​ ஜெயலலிதா, விஜயகாந்த், தா.பாண்டியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. இம்மன்றத்தின் மூலம் புதிய ஆட்சியைப் பாராட்டுகிறேன். புதிய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை 2 நாட்களுக்கு முன்பு கொடுத்தேன். அதை ஏற்கவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

 சரவணன் (தே.மு.தி.க.):​ முதல்​அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கும் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள விஜயகாந்துக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். எழும்ர் தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி, புளியந்தோப்பில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனிருந்து உதவி செய்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்