முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியா கார் குண்டு வெடிப்பில் 19 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 2 மே 2014      உலகம்
Image Unavailable

 

அபுஜா, மே 3 - ஆப்பிரிக்க நாடான நைஜீரியா தலைநகர் அபுஜாவில் போலீஸ் சோதனை சாவடி அருகே பஸ் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் ஒரு மர்ம நபர் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து மாயமானார். 

அதை தொடர்ந்து அக்கார் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. இந்த சம்பவத்தில் 19 பேர் அதே இடத்தில் உடல் சிதறி பலியாயினர். 60 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் போகோஹாரம் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்