திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு 22 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

நகரி,ஜூன்.- 6 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சராசரியாக 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஆனாலும் இதுவரை கூட்டம் குறையாமல் உள்ளது.  இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் 22 மணி நேரம் காத்திருக்கிறார்கள். ரூ. 300 கட்டணத்தில் சாமி தரிசனம் செய்ய 8 மணி நேரமாகிறது. திருப்பதி கோயிலுக்கு கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு திவ்விய தரிசனம் எனப்படும் விரைவு தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.
இதற்கு சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக 4 ஆயிரம் அறைகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள்தங்கும் அறை கிடைக்காமல் தவித்தனர். அவர்கள் சாலை ஓரங்களிலும், பூங்காக்களிலும் இரவில் ஓய்வெடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: