பிளே ஆப் சுற்று: மும்பைக்கு வாய்ப்பிருக்கிறது: ஹஸ்சி

செவ்வாய்க்கிழமை, 20 மே 2014      விளையாட்டு
Michael Hussey 1

 

ஆமதாபாத், மே 21 - ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் மும்பை-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை எழிதில் வென்றது.

முகலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மைக் ஹஸ்சி 56 ரன்னும், சிம்மோன்ஸ் 62 ரன்னும் எடுத்தார். அடுத்து 178 ரன்கள் என்ற கடின இழக்கொடு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓழர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் மும்பை 4 வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு அடுத்த சுற்று ஏறக்குறைய மங்கிவிட்டது. இந்த நிலையில் மும்பை அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு இன்னும் இருக்கிரது என்று அந்த அணி வீரர்க மைக் ஹஸ்சி கூறியுள்ளார். இது தொடர்பாக் அவர் கூறியதாவது: மும்பை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து இன்னும் வெளியேறவில்லை. வாய்ப்பில் நீடித்துக் கொண்டிருக்கிறோம். 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாய்ததில் உள்ளோம்.

தற்போது அடுத்த ஆட்டங்களில் அதிக கவனம் காட்ட வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. சர்வதேச போட்டிக்காக சென்றுள்ள மலிங்கா இடத்தை நிறப்புவது கடினம் அவர் மிகவும் முக்கிய பங்களித்து வந்தார். இந்த ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாகவே இருந்தது. ஆனாலும் நானும் சிமோன்சும் நல்ல பார்ட்னர்ஷிப்பை எற்படுத்தினோம் என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: