முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதாபிமானம் மிகுந்த மேற்கு வங்க அமைச்சர் மம்தா பானர்ஜி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,ஜூன்.- 13 - மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருந்து வருகிறார். இவரது தலைமையில் பல்வேறு அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் சிறைத்துறை அமைச்சராக இருப்பவர் சங்கர் சக்கரவர்த்தி. இவர் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை பற்றியும், அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் பற்றியும் சிந்தித்து வருகிறார். இம்மாநிலத்தில் மொத்தம் 55 சிறைச்சாலைகள் உள்ளன. அந்த சிறைச்சாலைகளில் கைதிகள் வாழும் சூழ்நிலை மற்றும் அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதே தனது நோக்கம் என்கிறார் சங்கர் சக்கரவர்த்தி. மனிதாபிமானத்துடன் சிறைச்சாலைகளையும் கவனிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காக ஒவ்வொரு கைதிக்கும் என்னால் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்க முடியாது. இருந்தாலும் ஒரு சிறைச்சாலைக்கு ஒன்றாவது கொடுக்க முடியும். மேலும் கைதிகளின் உணவு வசதிகளை முன்னேற்றவும், வாழும் சூழ்நிலைகளை முன்னேற்றவும் நான் முயற்சித்து கொண்டிருக்கிறேன் என்றும் சங்கர் தெரிவித்தார்.
கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தரத்தை நான் ஆராய்ந்து வருகிறேன். நான் திடீர் திடீரென்று சிறைச்சாலைக்கு சென்று ஆய்வு செய்யும் போது அங்கு உணவின் தரம் பற்றி புகார்கள் கூறப்படுகின்றன. மருந்துகள் பற்றியும் புகார்கள் வருகின்றன. எனவே அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளேன் என்றும் சங்கர் தெரிவித்தார். இந்த மந்திரியின் மனிதாபிமானத்தை பாராட்டத்தான் வேண்டும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony